Sunday 18 January 2009

நம்பலாமா நாடி ஜோதிடத்தை - பகுதி 1


முதலில் நாடி ஜோதிடத்தில் படிக்கப் படும் ஏடுகளை யார் எழுதியது ?

ரிஷிகள் முனிவர்கள் எழுதியது என்பார்கள்.


நான் புரிந்து கொண்டுள்ள வகையில் ரிஷிகள் முனிவர்களை எல்லாம் தற்போதைய ஸ்டான்டர்டுடன் பொருத்திப் பார்த்தால் ஆராய்ச்சியாளர்களாகவும் சிந்தனையாளர்களாகவும் தான் கருத முடியும். கல்வி கற்பித்தவர்களாகவும் ஒரு பல்கழைக் கழகம் போல குருகுலம் நடத்தியவர்களாகவும் தான் அறிகிறேன்.


அப்படிப்பட்டவர்களுக்கு இந்த மாதிரி பல ஆயிரம் ஆண்டுகளுக்குப் பிறகு பிறக்கப் போகிறவர்களைப்பற்றி அவர்கள் வரலாற்றை வாழ்க்கையை எழுத வேண்டிய அவசியம் ஏதும் இல்லை.


இப்போதைய மென்பொருள் நிறுவனத்தையே எடுத்துக் கொள்ளுங்கள், அவர்கள் இப்போது பயன் படக்கூடிய எதாவது ஒரு செயலுக்கு சாப்ட்வேர் எழுதுவார்களே தவிர, இன்னும் ஐம்பது வருடம் கழித்துத் தான் பயன் தரும் என்கிற வேலைக்கு கண்டிப்பாக எழுதமாட்டார்கள். அதுவும் இன்னும் ஆயிரம் வருடம் கழித்து பயன் தரும் என்றால் அதைப் பற்றி சிந்திக்கக் கூட மாட்டார்கள்.


எனக்குக் கடவுள் நம்பிக்கை உண்டு. ஆனால் கடவுளின் பெயரால் ரிஷிகளின் பெயரால் சொல்லப்படுகிற ஏமாற்று வேலைகளை நான் நம்புவதில்லை.

அவர்கள் வாழ்ந்த காலத்திலுள்ள சொசைட்டிக்கு உபயோகப்படக்கூடிய வகையில் ஏதாவது செய்திருப்பார்களே தவிர இது மாதிரி வேலையற்ற வேலையை செய்திருக்க வாய்பில்லை.


என்னைக் கேட்டால் ஜோதிடத்தை ஆத்திகர் நாத்திகர் என இரு சாரரும் எதிர்க்க வேன்டியது அவசியம்.


நம் நாட்டில் நல்ல ஆத்திகர்கள் ரொம்பக் கம்மி.

ஆனால் அதை விட நாத்திகர்கள் நம்மிடம் இல்லவே இல்லை என்றே நான் சொல்வேன். நம்மிடம் இருப்பவர்கள் போலி நாத்திகர்களே.

கடவுளை இழிவு படுத்திப் பேசுபவர்கள் எல்லாம் நாத்திகர்கள் அல்ல. இந்தப் பதிவில் அவர்களைப் பற்றி அதிகமாக பேச வேண்டியதில்லை. நாத்திகத்தை பற்றி தனிப் பதிவு எழுத உத்தேசம்.

நாடி ஜோதிடத்தைப் பற்றி அடுத்த பதிவில் தொடர்கிறேன்.

18 comments:

Anonymous said...

நல்லா ஆரம்பிச்சு இருக்கேங்க... ஒவ்வொரு பாகத்திலும் கொஞ்சம் அதிகமா எழுதுங்க... பொசுக்குன்னு முடிஞ்சா மாதிரி இருக்கு...

கோவி.கண்ணன் said...

//கடவுளை இழிவு படுத்திப் பேசுபவர்கள் எல்லாம் நாத்திகர்கள் அல்ல. இந்தப் பதிவில் அவர்களைப் பற்றி அதிகமாக பேச வேண்டியதில்லை. நாத்திகத்தை பற்றி தனிப் பதிவு எழுத உத்தேசம்.//

நிறைய மேட்டர் வச்சிருப்பிங்க போல, படிக்க ஆவலாக உள்ளேன்.

Anonymous said...

கடவுளை நம்பும் ஒருவர் அனைத்தையும் நம்பவேண்டும்.கற்பனையான கடவுளை மட்டும் எப்படி நம்பமுடிகிறது.யார் கடவுள்?,எது கடவுள்?,எப்படி கடவுள் வந்தது?எதற்கு கடவுள் வந்தது? என்பன போன்ற பித்தலாட்டங்களை முதலில் தெரிந்துகொள்ள முயலவும்.அதை விடுத்து நாடிசோதிடம்,பீடிசோதிடம் பற்றி எழுதுவதும் ஏமாற்று வேலைதான்.கடவுள் நம்பிக்கை இல்லாதோர் கூறினாலாவது ஓரளவிற்கு நம்பலாம்.

ரிஷபன்Meena said...

//கடவுளை நம்பும் ஒருவர் அனைத்தையும் நம்பவேண்டும்.கற்பனையான கடவுளை மட்டும் எப்படி நம்பமுடிகிறது.யார் கடவுள்?,எது கடவுள்?,எப்படி கடவுள் வந்தது?எதற்கு கடவுள் வந்தது? என்பன போன்ற பித்தலாட்டங்களை முதலில் தெரிந்துகொள்ள முயலவும்.அதை விடுத்து நாடிசோதிடம்,பீடிசோதிடம் பற்றி எழுதுவதும் ஏமாற்று வேலைதான்.கடவுள் நம்பிக்கை இல்லாதோர் கூறினாலாவது ஓரளவிற்கு நம்பலாம்.//

அனானி அன்பரே!
என் கேரக்டரைப் புரிஞ்சுக்குறதுக்குள்ளயே கத்திய சுத்துறீங்களே ! நான் புதுசு கண்ணா ! கண்ணா ! புதுசு.

தீவிர ஆன்மீக வாதியும் அல்ல. அதே சமயம் கடவுள் இல்லை என்று சொல்வதே மிகப் பெரிய தகுதி என்று நினைப்பவனும் அல்ல.

இதை எந்தக் கோனத்தில் உள் வாங்க வேண்டும் என்பது அவரவரின் தனிப்பட்ட விருப்பம் அவ்வளவே.

ரிஷபன்Meena said...

கோவி கண்ணன்,
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

Anonymous said...
This comment has been removed by a blog administrator.
Mahesh Rajamani said...

நல்ல கட்டுரை... உங்கள் ஆய்வும் நல்லா இருக்கு.... ஆனா நீங்க கிபி இருபதாம் நூற்றாண்டையும் கிமுவையும் ஒப்பிட்டது தவரு....

We are living in age of making livelihood and world of 'averages'.People accept and acknowledge only mediocrity. So naturally we can't expect a software professional to make something for 100 year from now.True.

But, some 2000 year before people wanted to make a mark. Man wanted to show that his period was the most glorious one to his future generation. Monolithic sculptures of Mamalapuram, Taj Mahal, Pyramids, Chola's Tangore Temple were examples for their glory.

If we ponder why British made a layout for such a big station in Chennai (Central) 100 years before when it was just a second terminus to Royapuram? We will very clearly understand our mediocre lifestyle.

May be somebody wanted to do, so that we blog about them in 2009. Who knows?

Michael Rayar said...

I would like to make a comment here on Naadijothidam and its importance,since i am in touch with more than 20 years.Really i did a research during my early years.There exists some places where it is used as commercial.
It is better to approach right place to verify your particulars.Astrology is true but prediction is based on the Astrologer's view which is purely on the skill and experience in this field.Similarly the particulars given by rishies are based on the individual power given to them by God.Those who have faith in their prediction and follow the Rishies' direction will be benefited.The accuracy expected is 90% which is enough for our normal life.

Anonymous said...

I have an objection to your opinion about the software development for the future. Even few years back we never think about Cloud Computing, but engineers were working on that today it is an reality. It is true that few people always work for the and think for the future community
Shanmugam N

Anonymous said...

I do not agree on your views on this and it only shows immaturity or ignorance of facts. Hinduism is the oldest tradition and a way of living. Astrology is part of it and this Nadi Josyam forms part of the same. Please correct yourself. It is apt that 'Empty vessels makes more noise'.

Anonymous said...

நம் முன்னோர்கள் என்ன முட்டாள்களா, வீணான எதையும் பதிவு செய்ய அவசியம் இல்லை

ரிஷபன்Meena said...

//நம் முன்னோர்கள் என்ன முட்டாள்களா, வீணான எதையும் பதிவு செய்ய அவசியம் இல்லை//

முன்னோர்கள் முட்டாள்கள் என்றூ எங்கே சொல்லியிருக்கிறேன். இது ஏமாற்றுவேலை என்று தானே சொல்கிறேன்.

Kasiviswanathan said...

Well Said Mahesh Ramamani, I completely agree with you. True Naadi Jothidam exists, but the complex part is to to find the right persons who are really expert in this and don't do it for commercial purposes

Unknown said...
This comment has been removed by the author.
pugazz said...

என்ன ரிஷபன்?....,
முக்காலமும் உணர்ந்தவர்களை தானே முனிவர்கள்.ரிஷிகள் என்போம். அவர்கள் எப்படி ஆயிரம் ஆண்டுகளுக்கு பிறகு உள்ளவைகளை எழுத முடியும் என்கிறீர்கள்? எந்த தேதியில் சென்று நாடி பார்ப்பீர்கள் என்று கூட அதில் உள்ளதாம். இது பொய்யா, மெய்யா என்று புரிந்து கொள்வது அவரவர் அறிவின் ஆழத்தை பொருத்து உள்ளது. உங்கள் சந்தேகத்தை கேள்வியாக வையுங்கள் முடிவை அவரவர் அறிவின் திறனுக்கு விட்டுவிடுங்கள்....நாடி சோதிடம் பற்றிய உங்கள் அனுபவம் உங்கள் ஞானத்துக்கு உட்பட்டதாக மட்டுமே இருக்கமுடியும். அடுத்தவர்கள் ஞானத்தை உங்கள் அனுபவமாக நீங்கள் சொல்வது பொருத்தமாக இருக்குமா என்று தெரியவில்லை! என் வார்த்தை தங்களுக்கு காயம் என்றால் என்னை மன்னிக்கவும்.......

ரிஷபன்Meena said...

//அடுத்தவர்கள் ஞானத்தை உங்கள் அனுபவமாக நீங்கள் சொல்வது பொருத்தமாக இருக்குமா என்று தெரியவில்லை! என் வார்த்தை தங்களுக்கு காயம் என்றால் என்னை மன்னிக்கவும்......//

கண்டிப்பாக காயப்படுத்தவில்லை. உங்கள் கருத்தைத் தான் நீங்கள் சொல்கிறீர்கள்.

//அவர்கள் எப்படி ஆயிரம் ஆண்டுகளுக்கு பிறகு உள்ளவைகளை எழுத முடியும் என்கிறீர்கள்? //

முடியும் ஆனால் அதை செய்திருக்க மாட்டார்கள் என்று தான் நான் நினைக்கிறேன்.

முற்பிறவியின் பலனை நாம் இந்த பிறவியில் அனுபவிக்கிறோம் என்ற இந்து நம்பிக்கையுடன் இது ஓத்துப் போகாது.


இந்தக் கட்டுரை மட்டுமல்ல எந்தக் கட்டுரையுமே வாசிப்பவர் அவரளவுக்கு இது சரியா இல்லையா என்று முடிவு செய்யக் கூடியதே!எப்பொருள் யார் யார் வாய் கேட்பினும் மெய்ப்பொருள் காண்பதறிவு.

இது தான் 100சதவிகிதம் சரி என்று நான் கூற வரவில்லை. எனக்கு சரி என்று பட்டதை எழுதியிருக்கிறேன் அவ்வளவே.

Chittoor Murugesan said...

நம்ம சைட்டை பார்த்தா அபிப்ராயத்தை மாத்திக்குவிங்கனு நினைக்கிறேன்.

http://www.anubavajothidam.com

Anonymous said...

Secret will always be a secret...
There is difference between "Hero of Technology" and KING OF SCIENCE"....
Creativity is a termed coined by humans but there are tons of things which creativity level not even dare to enter and humans cant think about that....
What you have written is good in some way and bad in another way....what to do that is also could be science...
King of Science would have read this article too ...ha ha haaaaa GOOD GOOD...Keep it upppp!!!!