Monday, 19 January 2009

நம்பலாமா நாடி ஜோதிடத்தை -பகுதி 2


சின்னக் குழந்தையாய் இருந்த போது ஒரு மேஜிக் நிபுன‌ர் சீட்டுக் க‌ட்டிலிருந்து நாம் நினைத்த‌ கார்டைக் கொண்டு வ‌ந்தாலோ, தொப்பியிலிருந்து புறாவை வ‌ர‌வ‌ழைத்தாலோ அவ‌ரைக் க‌ட‌வுள் மாதிரி பார்த்திருப்போம், அவ‌ருக்கு மாயாஜால‌ ச‌க்தி இருப்ப‌தாக‌வே நம்பியிருப்போம், ந‌ம்ப‌ விரும்பியும் இருப்போம்.

வ‌ளர்ந்து ஆளாகிய‌ பிற‌கு அதைப் பார்த்து அதிச‌ய‌ப்போம் , விய‌ப்போம் ஆனால் நாம் க‌ன்டுபிடிக்க‌ முடியாத வ‌கையில் த‌ந்திர‌மாக‌ செய்கிறார்க‌ள் என்போமே த‌விர‌ அவ‌ரை மாய‌வியாக‌ப் பார்க்க‌மாட்டோம்.

நாடி ஜோதிட‌மும் இதே போன்ற‌ த‌ந்திர‌ம் தான். நான் புரிந்து கொண்டிருக்கும் வரையில் நாடி ஜோதிட‌ம் ஒரு உளவியல் விளையாட்டே !

ந‌ம‌து வ‌ச‌திக்காக‌ ஜோதிடம் பார்க்க‌ வ‌ருகிற‌வ‌ர்க‌ளை இனிமேல் க‌ஸ்ட‌ம‌ர்க‌ள் என‌ அழைக்க‌லாம்.

உங்களுக்கு நாடி ஜோதிடம் பார்க்க வேண்டிய "விதி" இருந்தால் மட்டுமே அதை நாடி வருவீர்கள் என்றும் அப்படியே வந்தாலும் உங்களுக்கு நல்ல நேரம் இருந்தால் மட்டுமே உங்கள் "ஏடு" கைக்கு வரும் என்றும் கலவரப்படுத்துவார்கள்.

இது ஒரு டெக்னிக்.

ஏடு கிடைக்காவிட்டாலே ஏதோ பெரிய கெட்டதோ என்று நினைக்கும் நிலைக்குக் கஸ்டமரைக் கொண்டு வருவதற்கே இந்தப் பீடிகை.

நிகழ்காலத்தில் சூழ்நிலைகள் மற்றும் சந்தர்ப்பங்கள் தங்களுக்குச் சாதகமாக இல்லாத நிலையில் எதிர்காலத்திலாவது நல்லது நடக்குமா என்று தெரிந்து ஆறுதல் அடைய வேன்டியே "கஸ்டமர்கள்" ஜோதிடத்தை/"நாடி" சோதிடத்தை நாடுகிறார்கள்.

தனக்கு நல்ல நேரம் தொடங்கியாச்சு என்று அறிய விரும்பும் அவர்கள் சோதிடர்களுக்கு முழு ஒத்தழைப்புடன் நேர்மறையான பதில்களைத் தருவதற்கே விரும்புவார்கள்.

இதை நாடுபவர்கள் கேள்வி கேட்காம‌ல் ந‌ம்ப‌ விரும்புவார்க‌ள். த‌ன்னைப் ப‌ற்றி சில‌ ஆயிர‌ம் வ‌ருட‌ங்க‌ளுக்கு முன்பே எழுதியிருகிறார்க‌ளே என்ற‌ மலைத்துப் போய்விடுவது கூட அத‌ற்குக் கார‌ன‌மாக‌ இருக்க‌லாம்.

ப‌ழைய‌ கால‌த்து ஓலையில் அதுவும் வ‌ட்டெழுத்தில் அந்தக் காலத் தமிழ் பாடாலாக இருப்பதைப் ப‌டிப்பார்க‌ள். அதைப் பார்த்த‌துமே ,கொஞ்சம் நம்பியும் நம்பாமலும் இருப்பவர்கள் கூட சே...சே... இது க‌ண்டிப்பாக "பிராடு" ஆக‌ இருக்காது என்று நினைத்து விடுவார்க‌ள்.

நாடி ஜோதிட‌ர்க‌ள் பெரும்பாலும் உங்க‌ள் பெயர் , பெற்றோர் பெய‌ர், உங்க‌ள் தொழில் எல்லாவற்றையும் சுற்றி வளைத்துச் சொல்லி விடுவார்க‌ள்.

நேர‌டியாக‌ குறிப்பிட்டு அவ‌ர்க‌ள் சொல்லாவிட்டாலும் இந்த‌ப் பொதுப்ப‌டை விடைக‌ளே க‌ஸ்ட‌ம‌ர்க‌ளுக்குப் போதுமான‌தாக‌ இருக்கிற‌து.

உதார‌ன‌த்துக்கு ஆனைமுக‌ன் த‌ம்பி பெய‌ருடையான் என்று சோதிட‌ர் ப‌டிக்கும் போதே ஆமா அப்பா பேரு கார்திகேய‌ன் தான் என்று வாக்குமூல‌ம் தந்து விடுவார்க‌ள்.

எது எப்படியோ அவர்கள் ஆனைமுகன் தம்பி என்று எப்படியோ கண்டு பிடித்து விடுகிறார்களே என்று நீங்கள் நினைக்கலாம்.

அங்கே தான் அவர்களின் டிரிக் அதாவது தொழில் நுட்பம் வேலை செய்கிறது.

ஒன்றுக்கொன்று மாறுபட்ட சொற்றொடர்களைப் படித்து உங்களுக்கு தெரியாமலே உங்களிடம் விடை பெறுகிறார்கள் என்பதே உண்மை.

"ஆனைமுகன் தம்பியவன் அருந்தவப் புதல்வர்
இவர் காவிரி கரையோர‌ம் தான் வ‌ள‌ர்ந்த‌ த‌வ‌ப் புத‌ல்வரிவர்
உட‌ன் பிற‌ந்தோர் இவருக்கு இருவ‌ருண்டு
இரும்புத் தொழில் த‌ன்னை இனிதாகச் செய்திடுவார்"
என்ற‌ ரீதியில் இன்னும் கூட‌ ப‌ழ‌மையான‌ பாட்டுத் தமிழில் ப‌டிப்பார்க‌ள்.

இங்கே அவ‌ர்க‌ளுக்கு வேண்டுவ‌து ஒரே வ‌ரிக்காவ‌து ச‌ரி என்ற‌ ப‌திலே.

அப்பா பேரு கார்திகேய‌னுங்க‌ ஆனா ம‌த்த‌து எதுவுமே ச‌ரியாவ‌ல்லையே என்று க‌ஸ்ட‌ம‌ர் சொல்லும் போது, அப்பன்னா இது உங்க ஏடு இல்ல ப‌ர‌வாயில்ல‌ விடுங்க‌ அடுத்த‌தைப் பார்ப்போம் என்று அடுத்த‌ ஏடுக்குப் போய்விடுவார்க‌ள்.

ஆனால் அப்பா பெய‌ர் கார்த்திகேய‌ன் என்பதை அவ‌ர்க‌ள் ம‌ன‌தில் ப‌திய‌ வைத்திருப்பார்க‌ள்.

அடுத்த‌ ஏடில் க‌வ‌ன‌மாக‌ அப்பா பெய‌ர் வ‌ராம‌ல் ம‌ற்ற‌ விப‌ர‌ங்க‌ள‌ச் சேக‌ரிப்ப‌தில் க‌வ‌ன‌ம் செலுத்துவார்க‌ள்.

அவ‌ர்க‌ளுக்கு ஏற்க‌ன‌வே உங்க‌ளுக்கு இரும்புத் தொழில் இல்ல‌, உட‌ன் பிற‌ந்த‌வ‌ர் க‌ண்டிப்பாக‌ இருவ‌ர் இல்லை. காவிரி மாவட்டம் ஊர் அல்ல போன்ற‌ விப‌ரங்க‌ள் தெரியுமாத‌லால் அடுத்த‌டுத்த‌ கேள்விக‌ள் அத‌ற்க்குத் த‌குந்தார் போல் வ‌டிவ‌மைக்க‌ப் ப‌ட்டிருக்கும்.

கஸ்ட‌ம‌ர் த‌ன் கூட‌ வ‌ந்திருப்ப‌வ‌ரிட‌ம் பேசுவ‌தையும் அவ‌ரின் ரியாக்ச‌னையும் கூட‌ குறிப்பாக‌க் க‌வ‌னித்துத் த‌க‌வ‌ல்க‌ளை திர‌ட்டி விடுவார்க‌ள்.

க‌ஸ்ட‌ம‌ர் ரொம்ப‌ அப்பாவியாய் இருந்தால் ஒரிரு ஏடு ப‌டித்த‌ நிலையிலேயே ச‌ரியான‌ ஏடு கிடைத்து விடும்.

அடுத்த ஏடுகளில் வ‌ரும் பாட‌ல்க‌ளில்

க‌ஸ்ட‌ம‌ரின் பெய‌ர் ம‌ற்றும் த‌ந்தைக்கு இருக்கும் நோய் அம்மாவின் பெய‌ர் ‍‍‍ம‌ற்றும் க‌ஸ்ட‌ம‌ரின் ப‌டிப்பு க‌ல்யாண‌மான‌வ‌ரா என்ப‌து ப‌ற்றி ம‌ற்றும் குடும்ப‌/தொழில் பிர‌ச்ச‌னைக‌ள்
என்று ப‌ல‌ வேறுப‌ட்ட‌ காம்பினேஷ‌னில் கேள்விக‌ள் வ‌ரும்.

அவ‌ர்க‌ளுக்குத் தேவை ஒரு ஏட்டுக்கு ஏதேனும் ஒரு த‌க‌வ‌ல் தான். ஓவ்வொரு ஏட்டையும் அவ‌ர்க‌ள் இது உங்க‌ளுடைய‌த‌ல்ல‌ என்று வைக்கும் போது அட்லீஸ்ட் ஒரு ச‌ரியென்ற‌ த‌வ‌லும் மூன்று த‌வ‌று என்ற‌ ப‌தில்க‌ளும் கிடைக்கும்.

அப்ப‌டித் த‌வ‌றுக‌ளை அறிந்து ஒதுக்கி ஒதுக்கி கடஸ்டமரைப் ப‌ற்றிய‌ ச‌ரியான‌ த‌க‌வ‌ல்க‌ளை (அவரிட‌மிருந்தே) பெற்றிருப்பார்க‌ள்.

க‌டைசி ஏட்டில் இந்த‌க் த‌க‌வ‌ல்க‌ளை ப‌ழ‌ம்த‌மிழ் பாட்டுப் போல‌ த‌ரும் போது, க‌ஸ்ட‌ம‌ர் இது எல்லாமே ச‌ரியா வ‌ருதே என்று அக‌ ம‌கிழ்ந்து போவார்.
தன்னுடைய அடிப்படைத் தகவல்கள் சரியென்றதும், இனி படிப்பவை அனைத்தையும் அப்படியே நம்பலாம் என்ற மனநிலைக்கு வந்திருப்பார் கஸ்டமர்.
ஏடுபடிப்பவர்கள் இதில் தொழில் காண்டம், திருமண காண்டம் என்ற பல நிலைகளை வைத்திருப்பார்கள். கஸ்டமர் எந்த காண்டம் பார்க்க வேண்டும் என்று முன்பே சொல்ல வேண்டும். அப்ப தான் அந்த ஏடுகளாக பார்த்துத் தேட முடியும் என்று சொல்வார்கள்.

ஆனால் உண்மையில் அதிலிருந்தே அவர் என்ன பிரச்சனைக்காக ஏடு பார்கிறார் என்று அறிந்து கொள்வதற்காகவே இந்த "பிட்"‍ஐ போடுவார்கள். கல்யாணம் காண்டம் என்றதுமே அவருக்கு கல்யாணத்தில் சிக்கல் என்பதால்

அதற்குத் தகுந்த மாதிரி படிப்பதற்கே இந்த டெக்னிக்.
இதன் தொடர்ச்சியை அடுத்த பதிவில் எழுதுகிறேன்

24 comments:

மு.மயூரன் said...

ஆய்வுரீதியாக இதனை நீங்கள் எழுத முயன்றிருப்பது பாராட்டுக்குரியது. தொடர்ந்து எழுதுங்கள்.

நாடி சோதிடம் பற்றி விஞ்ஞான முறையில் ஆய்வொன்றைச்செய்ய வேண்டும் என்ற ஆவல் நெடுங்காலமாக இருக்கிறது. அதற்கு சரி பிழை என்ற முற்சாய்வுகள் இல்லாமல் இதனை அணுகவேண்டும்.

நாடி சோதிடம் குறித்த விக்கிபீடியா கட்டுரை ஒன்றை சில காலங்களுக்கு முன் ஆரம்பித்துள்ளேன்.

நீங்கள் பெறும் மேலதிக தகவல்களை அங்கே சேர்த்து கட்டுரையை மேலும் வளர்த்தெடுத்தால் அடுத்த தலைமுறைக்கு இது தொடர்பான நிறைய குறிப்புக்களை வழங்கலாம்.

விக்கி கட்டுரைகள் தொகுப்பது, விக்கிபீடியா குறித்த அறிமுகம் தேவையென்றால் நான் உதவுகிறேன்.

கட்டுரை இங்கே உள்ளது

Namakkal Shibi said...

நல்ல ஆய்வு!

உண்மையா நம்மகிட்டயே தகவலை வாங்கை நம்மகிட்டே பாட்டா சொல்லி அசத்திடுவாங்க!

ரிஷபன் said...

//.மயூரன் said...
ஆய்வுரீதியாக இதனை நீங்கள் எழுத முயன்றிருப்பது பாராட்டுக்குரியது. தொடர்ந்து எழுதுங்கள்.

நாடி சோதிடம் பற்றி விஞ்ஞான முறையில் ஆய்வொன்றைச்செய்ய வேண்டும் என்ற ஆவல் நெடுங்காலமாக இருக்கிறது. அதற்கு சரி பிழை என்ற முற்சாய்வுகள் இல்லாமல் இதனை அணுகவேண்டும்//

தங்களின் விரிவான பின்னூட்டத்திற்கு நன்றி, //

//Namakkal Shibi said... //
நன்றி நாமக்கல் சிபி

Geekay said...

நாடி சோதிடம் சுத்தமான ஏமாற்று வேலை.
நான் இருபது வருடங்களுக்கு முன் ஏமாற்றபட்டேன் .
இங்கு எழுதிவுள்ளது அனைத்தும் உண்மை.
ரிசபன் உங்கள் ஆய்வு மிகவும் அருமை.

செல்வம் said...

ரிஷபன்..உங்கள் கட்டுரையைப் படித்தேன்.இன்னும் படிக்க ஆவலாக உள்ளேன்.
மற்றபடி இக்கலை குறித்தான எனது ஆச்சரியங்கள் உண்மையே.

நீங்கள் சொல்வது போல் "யாரு ம‌ன‌சுல‌ யாரு...உங்க‌ ம‌ன‌சுல‌ யாரு டைப்பில் இருந்தாலும்,பேசிக்கொண்டிருந்த‌ 10 நிமிட‌த்தில் நான் சொல்லிய‌ ஆம் / இல்லை ப‌தில்க‌ளை வைத்தே என் பெற்றோர் பெய‌ர்,என் வ‌ய‌து, நான் பிற‌ந்த‌ தேதி,ந‌ட்ச‌த்திர‌ம்,முக்கிய‌மாக‌ என‌து ப‌டிப்பு,என் த‌ம்பியின் தொழில்,இவ்வ‌ள‌வையும் சொல்லி என்னை ஆச்ச‌ரிய‌ப்ப‌ட‌ வைத்தார்க‌ள்.

அதிலும் ஏடு ப‌டித்த‌வ‌ர் என் முக‌த்தைக் கூட‌ப் பார்க்காம‌ல் ஏடு புர‌ட்டுவ‌தில் தான் தீவிர‌மாக‌ இருந்தார் நான் அவ‌தானித்த‌ வ‌ரை.உள‌விய‌ல் ரீதியாக விடை காண‌ முய‌ல்ப‌வ‌ர்க‌ள் என் முக‌த்தைக் கூட‌ப் பார்க்காம‌ல் எப்ப‌டி சொல்ல‌ முடியும்?

ம‌ற்ற‌ப‌டி இன்னும் இக்கலையைப் ப‌ற்றி தெரிந்து கொள்ள‌ ஆவ‌லாக‌ உள்ளேன்.

களப்பிரர் said...

சிறப்பான பதிவு !! அடுத்த பகுதிக்காக காத்திருக்கிறேன் !!

துளசி கோபால் said...

நாடியை அப்புறம் படிக்கிறேன். இப்போதைக்குப் பின்னூட்டம்.... பாப்பா.

யாருங்க அந்தப் பாப்பா? ரொம்பச் செல்லம்போல இருக்கு.

குழந்தைக்கு வாழ்த்து(க்)கள்.

ரிஷபன் said...

//துளசி கோபால் said...
நாடியை அப்புறம் படிக்கிறேன். இப்போதைக்குப் பின்னூட்டம்.... பாப்பா.

யாருங்க அந்தப் பாப்பா? ரொம்பச் செல்லம்போல இருக்கு.

குழந்தைக்கு வாழ்த்து(க்)கள்.//


என் அன்பு மகள் மீனா.

மெச்சி யுனை ஊரார் புகழ்ந்தால்
என் மேனி சிலிர்குதடீ!

என்ற பாரதியின் வார்த்தைகளுக்கு அர்த்தம் விளங்க வைத்தவள்.

வலைப் பூக்களை நான் படிக்க ஆரம்பித்த நாட்களிலே மிக அதிகம் பார்த்த பெயர் உங்களுடையது. ஏறத்தாழ எல்லா வலைப் பதிவர்களுக்கும் தெரிந்த பெயர் என்றே நினைக்கிறேன்.

தங்களின் தாய்லாந்து கட்டுரை படித்திருக்கிறேன்.


வெகு நாட்கள் பழகியது போன்று ஒரு தோழமையை எழுத்தில் கொண்டு வருவது உங்களின் தனிச் சிறப்பு.தங்கள் வருகைக்கு நன்றி.

Indian said...

100% true. Keep going.

Indian said...

100% true. Keep going.

தேனியார் said...

மனிதர்களுக்கு ஆயிரம் நம்பிக்கைகள்.அதை ஒரு சிலறே அலசி ஆராய்கிறார்கள்.அதில் நீங்களும் ஒருவர் என்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்.

தங்கள் எழுத்தில் ஆராய்ச்சி இழையோடுவது அற்புதம்.

தொடர்ந்து எழுதுங்கள்.

மீனாவுக்கு எனது வாழ்த்தை சொல்லுங்கள்.

Anonymous said...

Mr. Rishaban,

I have read your blogs regarding the nadi article, nadi is true, not a false one.

Regards,
Kesavan V
Chennai.

Anonymous said...

Mr.Rishaban,

I am not satisfied in your research, I am learning and doing research in astrology for the past 6 Years. I have seen the nadi astrology in so many places. They are asking some questions to predict our leaf. That's all. There are so many proofs I have. But, One sample incident for you, I went to see nadi for my friend sister marriage. Name of my friend sister is "PonMuthu Saraswathi" She was named because, born in Saraswathi pooja. This information was not known by nadi predictor. But he said her name and why she named like this.
I am not hurting you, Just telling my experiences.
If you have any queries, mail me to k7.vellaiyan@gmail.com

SurveySan said...

எதையோ தேடப் போய் இது கண்ணுல மாட்டிச்சு.

என்னாச்சு உங்க எழுத்துப் பணி? லீவா?

Anonymous said...

Mr, Rishapan,
I have experience on thirumana kaanadam.
The reason for refusing Naadi astrology is u r thinking that they predict ur past from hints. Ok.
Consider this. I saw Thirumana Kaandam before the marriage. They told the name of the boy, his father's name, mother's name, no of siplings, and job every thing. u can agree thats not predicted by hints since at that time we were searching for marriage. after few months , we got a guy with the same details provided by the naadi astrology. it was amazing.

Dont refuse with out any experience. Its easy to refuse anything . feel this experience. what an amazing.

Anonymous said...

Hi
Vanakkam

I totally disagree with Rishipan's article.

I just sent my Thumb impression to Nadi Astro ,Palani and got a cassette about my Pothu Kandam...

That clearly says that i am in love and will marry the same girl

I was surprised.

Currently married to the same girl and having kids.

So please not throw words without knowing abt that...

Anonymous said...

I guess Rishiban have not gone to a Doctor..

if you have some issues...the Doctor asks the Symtoms and then analyse Based on his/her Medical Studies and says the ISSUES.

In Nadi ..they ask questions to shortlist the correct Palm Leaf...


They just ask Mother , Father name to shortlist the palm leaf...not other details..

So when they say for Poothu Kandam....they clearly say a summary of our life...

I am at 65 years and the person said all about my life , work and children details.
( i just gave my thumb print and then father and mother name to match )

So I request the blog readers to trust the Nadi Astrology.

ரிஷபன் said...

அனானி 20:58 (26 December 2009)

//Dont refuse with out any experience. Its easy to refuse anything . feel this experience. what an amazing.//

வருகைக்கு நன்றி!

உங்கள் கருத்து உங்களுக்கு.

அய்யா அனானி தங்கள் பெயரை குறிப்பிட்டிருந்தால் நான் உங்களை டேட் டைம் வத்து விளிக்க வேண்டி வந்திருக்காது.

யார் கண்டது அனானி பெயர் அறிய “அனானி” காண்டம் என்று கூட ஏட்டில் இருக்கலாம்

ரிஷபன் said...

//So when they say for Poothu Kandam....they clearly say a summary of our life...//A very smart man recently told me me this!
I will just take every day as it is given to me and let the future handle itself.

VENG said...

அடுத்த நாடி ஜோதிட பதிவு எப்போங்க...?

அமர பாரதி said...

சரியாகச் சொன்னீர்கள். இதைப் பற்றி சுப்பையா வாத்தியார் பதிவில் நான் இட்ட பின்னூட்டம் வருமாறு,

நாடி ஜோதிடம் என்பது என்னைப் பொறுத்த வரையில் ஏமாற்று வேலை. தேர்ந்த மனிதர்களைக் கொண்டு நம்மிடமிருந்தே தகவல்களைப் பெற்றுக்கொண்டு அதை பாட்டாக படித்து ஏமாற்றுகிறார்கள். மேலும் ஏடுகளில் எழுதப்பட்டவைகளைப் படிக்க அதில் அனுபவம் மிக்க அறிஞர்களால் மட்டுமே முடியும். வைத்தீஸ்வரன் கோவிலில் ஏடு படிப்பவர்கள் இந்த தகுதி பெற்றவர்களாக இருக்க முடியாது.

பெரும் பணம் புரளும் ஒரு வியாபாரம் அது.


// தந்தையின் பணி பற்றியும் கூட மிகச்சரியாகவே கூறியது எப்படி என்று ஆச்சரியப்படுகிறேன்.//


இப்படியாக இருக்கலாம். உங்கள் பெயர் சரவணன் என்று வைத்துக்கொள்வோம். ஏடு படிப்பவர் ஒரு கட்டை எடுத்து வருகிறார்.

ஏ.ப: ..... .... ... (புரியாத வகையில் ஏதோ சொல்லி விட்டு) .... .... ஆறேழுத்தில் அமைந்த பெயர் கொண்ட (மறுபடியும் புரியாத) .... உங்கள் பெயர் ஆறெழுதில் இருக்கிறதா?
நீ: இல்லை.
ஏ.ப: இந்த சுவடி உங்களுடையது இல்லை. அடுத்ததை படிக்கிறேன். .... ..... .... பத்தில் பாதி எழுத்து கொண்ட..... உங்கள் பெயர் ஐந்தெழுத்தா?
நீ: ஆமாம் சார்.
ஏ.ப: உங்கள் ஏடு போல இருக்கிறது. இருந்தாலும் உறுதிப்படுத்திக்கொள்வோம். ...... ..... .... ண...ன...ண...ண...ன உங்கள் பெயரில் ரகரம் இருக்கிறதா?
நீ: ஆமாம் சார்
ஏ.ப:..... ... ..... ...... கொம்பில்லா சிவனின் முதல் எழுத்து உங்கள் பெயரின் முதல் எழுத்தா? அதாவது "ச" உங்கள் பெயர் முதல் எழுத்தா?
நீ: ஆமாம் சார். (என்னமா இருக்குது சுவடிகள்!!!)
[பெயர் ஐந்து எழுத்து, "ர" இருக்கிறது. முதல் எழுத்து "ச". இதில் தேறுவது சரவணன் மற்றும் சற்குணம் (மேலும் இருக்கலாம் ஆனால் உதாரணத்துக்கு இரண்டை மட்டும் கொடுத்துள்ளேன்.)
ஏ.ப: .... ... .... .... ண ண ண..... உங்கள் பெயர் சிவ மைந்தனின் பெயரா?
நீ: என்னது?
ஏ.ப: அதாவது செந்தில், முருகன் அல்லது சரவணண் ஆ?
நீ: ஆமாம் சார் (கலக்கலா இருக்கே)
ஏ.ப: (ஐந்து எழுத்து பெயர், முதல் எழுத்து "ச" அதனால் சரவணன்)

(அன்று செவ்வாய்க் கிழமை தை 10ம் நாள் அன்று நீங்கள் மனைவியுடன் சென்றிருக்கிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம்.)

"சரவணன் என்ற சிவனின் மகனான
மங்கல வாரத்தில் அறுவடை மாதத்தில்
ஈரைந்து நாளில் தம்பதி சமேதராக
வந்துள்ள உங்களுக்கு பெரியோன் பாதம் வணங்கி

விதியை உரைக்கிறேன் பணிந்து நின்று கேட்பாயாக."

இப்படித்தான் இருக்கும் அய்யா. ஏடு படிப்பவர்கள் புத்தி சாலிகள் என்பது உண்மை. மேலும் உங்கள் வாயை பிடுங்கி சொல்லும் போது கடந்த காலத்தை மட்டும் தானே சொல்ல முடியும்?

நீங்களும் "அப்படியே நம்பளப்பத்தி இருக்குது." என்று நினைத்துக்கொண்டு எல்லா காண்டத்தையும் பார்த்து விட்டு ஒரு 500 - 1000 ரூபாய்களை கொடுத்துவிட்டு வந்து விடுவீர்கள்.

goma said...

சிறப்பான பதிவு !! அடுத்த பகுதிக்காக காத்திருக்கிறேன்
களப்பிரர் போல்

ரிஷபன்Meena said...

Goma,

தங்கள் வருகைக்கு நன்றி!!

நம்முடைய பழைய பதிவில் திடீரென ஒரு பின்னூட்டத்தைப் பார்க்கும் போது ஏற்படுகிற சந்தோஷம் அற்புதமானது.

விரைவில் இதன் தொடர்ச்சியை எழுதுகிறேன்.

vshe said...

Astrology can not be discounted 100% as false. It depends on the interpreter.

There are more fraudsters than the real naadi josiers around in the market.

They are easily distinguishable.
1. They ask too many questions.
2.Never give more info, than what is reqd.
3. Better play it with a poker's face without showing excitement or anxiety.
4. Verify the final rendering of the poetry with what has been explained in the leaf. At least we can identify the placement of characters to confirm if the poem written is what is there in the leaf. There are few tamil alphabets that have not changed with time.
5. Always corroborate with the actual horoscope.
6. Never subscribe to any parihaaram (remedies) recommended. The fake guys push u to do parihaaram, more aggressively than the real one. They may also ask u to go for the other kaandams.


I have seen and experienced various astrologers using various techniques (prasannam, sozhi) who came out with accurate predictions of my future and past too.