Thursday 24 December 2009

தாய்லாந்தும் டைகர் டெம்பிளும் -பகுதி 1

பயணம் போவது என்றால் யாருக்குத்தான் பிடிக்காது.ஒவ்வொரு பயணமும் நம்மைப் புதுப்பிப்பது என்பது உண்மை தானே. இந்த முறை ஊர் செல்லும் போது தாய்லாந்து மலேசியா சிங்கப்பூர் வழியாக செல்லலாம் என்று முடிவு செய்தோம்.

டிஸ்கவரி சானலில் ஒரு புத்த பிக்க்ஷு புலியை ஏதோ நாய் குட்டி போல பிடித்துக் கொண்டு நடந்து போவதை நான் முதலில் பார்த்தபோது ஆச்சரியத்தில் இப்படி கூட முடியுமா என்று வியப்புற்றேன்.தாய்லாந்தில் ஏதோ ஒரு இடம் என்று பார்த்ததாக ஞாபகம். அங்கே போகலாம் என்று அப்போது சிந்திக்கக் கூட இல்லாதால் அது எங்கே இருக்கிறது அந்த நிறுவனத்தின் பெயர் என்ன என்பதை எல்லாம் நான் அப்போது கவனித்து வைத்திருக்கவில்லை.


From Rishaban tour

தாய்லாந்துக்கு போகலாம் என்று முடிவு செய்தவுடன் நான் பார்க்கவேண்டிய இடங்களுக்கு லிஸ்ட் தயார் செய்த போது இந்த புலிப்பேட்டை தான் முதலிடம் பிடித்து. ஆனால் அந்த ஊரின் பெயரும் தெரியாமல் அது ஏதும் சரணாலயமா அல்லது zoo-வா என்று தெரியாத நிலையில் அது பற்றிய விபரத்தை தாய்லாந்து எம்பஸிக்கு போயும் கூட என்னால் சேகரிக்க முடியவில்லை.

எனக்கு பாக்கேஜ் டூரில் செல்வது அறவே பிடிக்கவே பிடிக்காத ஒன்று. சில சமயம் அது எக்னாமிக்கலாக கூட இருக்கலாம். ஆனால் என் வீட்டுக்காரரும் கச்சேரிக்கு போனார் என்கிற மாதிரி நானும் இந்த இந்த இடங்களுக்கு போயிருக்கிறேன் என்று சொல்லிக் கொள்ள உதவுமே தவிர நாம் ரசித்து பார்க்க இயலாது. அடுத்தடுத்த ஊர்களுக்கு உள்நாட்டு விமானமோ அல்லது ரயிலோ புக் செய்திருப்பார்கள் எங்கேனும் நாம் விரும்பினால் கூட அதிக நாள் தங்க இயலாது போகும்.அவர்கள் அரேஞ்செய்திருக்கும் சைட்சீயிங் டூர்கள் எல்லாம் எக்ஸ்பிரஸ் வேகத்தில் இருப்பதுடன் பிடிக்கிறதோ பிடிக்கலையோ எல்லாத்திற்கும் போய் தொலைய வேண்டி இருக்கும். எனக்கு ம்யூசியம், பார்க், ஷாபிங்க் மால்கள் பார்பதில் கொஞ்சம் கூட ஈடுபாடு கிடையாது.

அதனால் தகுந்த முன் ஏற்பாடு இல்லாமல் அங்கே போய் பார்த்துக் கொள்வோம் என்று 'கோயிந்து' மாதிரி கிளம்புவது தான் எனக்குப் பிடிக்கும். அதனால் சென்று சேர்கிற முதல் நாள்மட்டும் தங்குவதற்கு Baiyoke Towers-ல் புக் செய்து கொண்டு கிளம்பினோம். ஹோட்டல்களின் வலைத்தளத்தில் இருக்கிற டாரிப் கார்டுகளைப் பார்த்தால் நெட்-புக் செய்தால் மிகக் குறைவு என்பது போலவும் வாக்-இன் –கஸ்டமர்களாக சென்றால் ரேட் அதிகம் என்பது போல கான்பித்திருப்பார்கள். ஆனால் நேரில் செல்லும் போது இந்த இரண்டுக்கும் சம்மந்தமில்லாமல் மிக குறைந்த விலைக்கு கிடைக்கும் என்பதே நிஜம். அதனால் சென்று சேர்கிற முதல் நாள்மட்டும் தங்குவதற்கு பாங்காக் Baiyoke Towers-ல் புக் செய்து கொண்டு கிளம்பினோம். தாய் பாட் 4500 என்று புக் செய்திருந்தோம். அதே லோகெஷனில் அதே தரத்தில் 3 ஸ்டார் ஹோட்டல்கள் 1300 க்கு வாக்-இன் – கஸ்டமராக செல்லும் போதே கிடைத்தது.

புறப்படுவதற்க்கு முன் என்ன என்ன இடத்திற்கு போகிறோம் என்று நெட்டில் தேடும் பொழுதே எனக்கு டூர் போகிற அனுபவம் கிடைக்க ஆரம்பித்துவிடும். தவறாமல் லோன்லி பிளானட் (lonely Planet) புத்தகமும் வாங்கி விடுவேன். இந்த புத்தகம் back baggers என்று அழைக்கப்படும் லோ பட்ஜெட் வெளிநாட்டு பயணிகளுக்கு வேதம். அதில் இல்லாத விபரமே இருக்காது. சாதரான லாட்ஜ் முதல் ஐந்து நட்சத்திர ஹோட்டல்கள் வரை அதன் லொகேஷன் நீங்கள் பார்க்க இருக்கும் டூரிஸ்ட் சைட்-லிருந்து எத்தனை தூரத்தில், அதன் ரேட்,தரம் மூட்டைப்பூச்சி இருக்கா இல்லையா என்பது வரை அத்தனையும் தந்திருப்பார்கள். அது போல பப்ளிக் டிரான்ஸ்போர்ட் முதல் டாக்சி, rent a car,டுக் டுக்( நம்ம ஆட்டோதான்)எல்லாவற்றையும் தந்திருப்பார்கள். மேலும் எங்கிருந்து எதுவரை ரயிலில் செல்வது உசிதம் பின் டாக்சி அல்லது போட் எது நம் டார்கெட்டு செல்ல வசதியானது,மேலும் நடந்தே பார்க்க வேண்டிய பகுதிகள் எவை. அங்கே எந்த மாதிரி ஏமாற்று வேலைகள் நடக்கும்(touris traps)என்று விலாவரியாக எழுதியிருப்பார்கள்.அதைப் படிக்கும் போதே அந்தப் பகுதிகளுக்குள் நம் ஒரு வலம் வந்தது போலவே இருக்கும்.



நெட்டில் ரிச்சர்டு பாரக் என்பவர் சிங்கப்பூரில் தொடங்கி ரயிலிலேயே மலேசியா வழியாக தாய்லாந்து, லாவோஸ் வரை சென்ற அனுபவத்தைப் படித்ததும் தரைவழியில் போனால் இன்னும் நன்றாக இருக்குமோ என்று ஆசை வர ஆரம்பித்தது.சின்னக் குழந்தை முன் வைத்த மிட்டாய் பிளேட் மாதிரி, படிக்கிற இடத்தை எல்லாம் லிஸ்டில் சேர்க்க ஆரம்பித்தேன். நான் மேப் எல்லாம் பிரிண்ட் பண்ணி வைத்துக் கொண்டு பிளான் பண்ணுகிறேன் பேர்வழி என்று கடைசி வரை மாற்றிக் கொண்டே இருந்தேன்.ஒரு கட்டத்தில் பொறுமை இழந்த தங்கமணி (வலைப்பதிவில் மனைவியை இப்படி தான் குறிப்பிடுகிறார்கள் ஊரோடு ஒத்துப்போகிறேன்), இங்க பாருங்க அந்த நாட்டை படையெடுத்துப் பிடிக்கவா போறீங்க, நம்ம சுத்திப் பார்க்கத்தான் போறோம் -ன்னு நினைத்துக் கிட்டு சீக்கிரமா பிளானை பைனலைஸ் பன்னுங்க, கைக்குழந்தைய வச்சுகிட்டு கிளம்புறோம் அங்க வேற மழை காலம்ன்றீங்க அதுக்கு தகுந்த மாதிரி இருக்கட்டும் என்றார்.

அதானால் ரயில் செல்கிற ஆசையை முதலில் மூட்டை கட்டினேன். புக்கட், க்ராபி, கோ சுமோய் போன்ற தமிழ் பாட்டு சீன்களில் வருகிற பீச்சுகளை தவிர்த்து பாங்காக், ரத்னகோஸின் ஐலண்ட், காஞ்சினபூரி, சையோக் அங்கிருந்து வடக்கே ச்ச்யாங்மெய் வரை தாய்லாந்தில் பார்க்கலாம் என்று முடிவு செய்தோம்.

பாங்காக் ஏர்போர்ட் மிகப் பெரியது. சுவர்ணபூமி என்ற சமஸ்கிருதப் பெயரிலேயே அது அழைக்கப்படுகிறது. விசா பார்மலிட்டிகள் பத்து நிமிடத்தில் முடிய 20 நிமிடத்தில் சுவர்ண பூமி ஏர்போர்ட்டை விட்டு வெளியில் வந்தோம், நாங்கள் தங்கிய இடம் ப்ராட்நாம் (Pratunam)என்கிற லிட்டில் இந்தியா, அதனால் இந்திய உணவுக்கு பஞ்சம் இல்லை மதிய வேளையில் வந்திறங்கியதால் "புலி" பார்க்க வேண்டி டிராவல் எஜெண்ட்களைப் பார்த்து பேசினேன். அவர்கள் பாங்காக் கோவில்களிலும், ரோஸ் கார்டன் மற்றும் floating மார்கெட்டிலும் எங்களை தினிக்க முற்பட எனக்கு ஏமாற்றமாக இருந்தது.

From Rishaban tour
மாலை மார்கெட் ஏரியாவில் சில எஜெண்டுகளப் பார்த்தேன். அதில் ஒரு பெண் நீ சொல்கிற இடம் டைகர் டெம்பிள் அது காஞ்சினபூரியில் (kanchinaburi) இருக்கிறது என்றாள். காஞ்சினபூரி பற்றி ஏற்கனவே நெட்-ல் அலசி வைத்திருப்பதால் பாங்காக் -ஐ பிறகு பார்த்துக் கொள்ளலாம் என்று அன்றிரவே அங்கே செல்ல கார் ஏற்பாடு செய்யக் கேட்டேன். கார் ஏற்பாடு செய்வதற்கு பதிலாக, அங்கே தங்குவதற்கு floating raft hosue -ல் நீங்கள் தங்க ஏற்பாடு செய்கிறேன் அவர்களே உங்களை கூட்டி போக கார் அனுப்பவார்கள் ஏன்றாள். அது மட்டுமல்ல அங்கு தங்கியிருக்கிறவரை நீங்கள் எங்கு போக வேண்டுமானாலும் அவர்கள் கார் அனுப்புவார்கள் அதற்கு கட்டணம் ஏதும் இல்லை, உணவும் இதில் அடக்கம் மூன்று நாட்களுக்கு 9000 தாய் பாட் என்றாள். அந்த ஹவுஸ் தரம் வசதி அதன் வாஸ்து என அனத்து விவரங்களியும் கேட்ட பின் நான் நெட்-ல் பார்த்த விலையைவிட தோதான விலையாக இருந்தாதால் புக் செய்தேன்.மறுநாள் காலை ஹோட்டலுக்கு வண்டி வரும் என்றாள்



ஹோட்டலுக்கு வந்ததும் என் காஞ்சினபூரி பற்றிய குறிப்புகளைப் படித்தேன், காஞ்சினபூரி பாங்காக்-லிருந்து 300 கீ.மீ வடக்கில் பார்மா எல்லை அருகே உள்ள சிறு நகரம். தங்கமணியிடம் நம்ப போகிற இடம் பர்மா பார்டருக்கு அருகில இருக்கு, அங்கே கொசு நிறையாவாம் என்றேன். வந்தமா சிட்டியில இருக்கிற இடங்களைப் பார்த்தோமா ஏன்று போகாம புலியப் பார்க்கிறேன் எலியப் பார்கிறேன் ஏன்று ரிமோட் வில்லேஜ்க்கு எல்லாம் எதுக்கு போவானேன்.கைப்புள்ள வேற இருக்குல்ல என்று அலுத்துக் கொன்டார்.குழந்தைக்கு ஒத்துக் கொள்ள்வில்லை என்றாள் யூ டெர்ன் எடுத்து இந்தியா செல்ல வேண்டுமே என்ற கவலை எங்களுக்கு. ஆனால் எங்க பாப்பா டூர் முழுதும் இடையூரா அப்படின்னா கிலோ என்ன விலை என்று கேட்டது இறைவன் அருளே.




8 comments:

Anonymous said...

:-)

Shankar

Thenammai Lakshmanan said...

//இங்க பாருங்க அந்த நாட்டை படையெடுத்துப் பிடிக்கவா போறீங்க, நம்ம சுத்திப் பார்க்கத்தான் போறோம் -ன்னு நினைத்துக் கிட்டு சீக்கிரமா பிளானை பைனலைஸ் பன்னுங்க,//

hahaha

i like ur thangamani RISHABAN

i like this issue also very much

www.bogy.in said...

தமிழர்கள் அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்

இந்த ஆண்டு உங்கள் வாழ்வில் எல்லையில்லா மகிழ்ச்சியும், நோயற்ற வாழ்வும், குறைவற்ற செல்வமும், நீண்ட ஆயுளும் மற்றும் அனைத்து நலங்களும், வளங்களும் பெற்று வாழ வாழ்த்துகிறோம்.

அன்புடன்
www.bogy.in

anujanya said...

ஹாஸ்யம், சுவாரஸ்யம். அடுத்த பாகங்கள் என் இன்னும் எழுதவில்லை பாஸ்?

அனுஜன்யா

ரிஷபன்Meena said...

அனுஜென்யா,

உங்கள் வருகைக்கு நன்றி!

ஒரு பின்னூட்டத்தில் பார்த்து உங்கள் பதிவுக்கு வந்தேன்.

கவிதைகளும் கட்டுரைகளும் வித்தியாசமாக இருக்கு.

உங்கள் எழுத்து நடைஅற்புதம்.

ரிஷபன்Meena said...

ஷங்கர் மற்றும் தேனம்மை லட்சுமணன்

தங்கள் வருகைக்கு நன்றி!!

தருமி said...

ஊர் சுற்றுவதை விட அதை ஆராய்ச்சி லெவலில் அலசி விடுவீர்கள் போலும்!

ரிஷபன்Meena said...

//தருமி said... ஊர் சுற்றுவதை விட அதை ஆராய்ச்சி லெவலில் அலசி விடுவீர்கள் போலும்!//

நிறைய நாடுகள் சுற்றிவிடனும் என்பது என் ஆசை. ஆனால் நேரமும் பணமும் தான் constraint, எத்தனை முடியுமோ அத்தனை பார்த்திடனும்.

சென்று பார்க்கிற இடத்தின் கலாச்சார வரலாற்று பின்னனிகளை தெரிந்து கொண்டு அந்த இடங்களும் செல்லும் அனுபவமே தனி தான்.

தாய்லாந்து கோவில்கள், டெத் ரயில்வே பற்றி முன்னமேயே படித்ததானால் ரசித்து பார்க்க முடிந்தது.