Tuesday, 29 June 2010

தயவு செய்து அமைதி காக்கவும்

சென்ற நவம்பர் இறுதியில்  குழந்தைகள் தினந்தன்று  ஏற்பாடு செய்யப்  பட்டிருந்த  குழந்தைகளுக்கான கலை நிகழ்ச்சிகளுக்கு சென்றிருந்தேன்.

குழந்தைகள் அத்தனை பேரும் கலக்கினார்கள்.  நிகழ்ச்சி ஆரம்பிப்பதற்கு முன்பே அவர்கள் performance ஆரம்பித்து விடுகிறது. சற்றே இல்லை!! இல்லை!! நிறையவே வசதிக் குறைவாக இருக்கும் காஸ்ட்யூம்-களை அனிந்து கொண்டு, அது கசங்கமால் அதுகள் பார்த்துக் கொள்வதே தனி அழகு. ரொம்ப பேசினால் லிப்ஸ்டிக் அழிந்து விடுமே என்று பேசுவதேயே தவிர்த்த அவர்கள் அர்பனிப்பு உணர்வு மெய்சிலிர்க்க வைத்தது.


என் மகள் மீனா வெள்ளைக் கொடி வேந்தன் வேடத்தில் வந்திருந்தாள்.

”சண்டை போடமாட்டேன்” என்பது தான் அவள் மேடை ஏறி சொல்ல வேண்டிய டயலாக்.

அத்தனை பொறுமையாக  அவள் மேக்கப் செய்து கொண்டது ஆச்சர்யமாக இருந்தது. அந்த நேரம் பார்த்து கூட்டத்தில் பிறந்த நாளுக்கு யாரோ சாக்லேட் வழங்க, அடடா இப்ப சாக்லேட் சாப்பிட ஆரம்பிச்சா எல்லா மேக்கப்-ம் போய்ட போகுதே என்று நாங்கள் பயப்பட,     ”சண்டை போடமாட்டேன்” சொல்லிட்டு வந்து சாப்பிட்டுக்கிறேன் என்று எங்களை ஆச்சர்யப் படுத்தினாள். அவள் வலது கையில் வைத்திருப்பது சாக்லேட், போட்டோவில் பார்க்கலாம்.

நிகழ்ச்சி ஆரம்பிக்க நேரம் இருந்ததால் நான் சில படங்கள் எடுத்தேன்.
ஆமா ஆமா ராஜா சிரிச்சா இப்படி தான் சிரிப்பாரு.


குழந்தைகள் அரும்பாடு பட்டு வசனங்களை ஏற்ற இறக்கத்துடன் பேசி பிரமாதப் படுத்தினார்கள். சில குழந்தைகள் டான்ஸ் , கீ போர்ட் என்று கலக்கினார்கள். மேனி முழுதும் கலர் பூசி மீனாட்சி, கிருஷ்ணர்,  அர்த்தனாரீஸ்வரர் என்று பிரமாதப்பத்தினார்கள். குருக்கள் வேடமணிந்த குழந்தைக்கு இதற்காகவே மொட்டை போட்டு, கொஞ்சூண்டு முடியை விட்டுவைத்து  குடுமியாக்கி இருந்தார்கள்

ஆனால் ஆடியன்ஸ் அது பற்றி எல்லாம் கவலைப்படாமல் பேசிக் கொண்டே இருந்தது கொஞ்சம் நெருடலாக இருந்தது. நிகழ்ச்சி அமைப்பாளர்கள் தயவுசெய்து அமைதிகாக்கவும் என்று எத்தனையோ முறை மைக்-கினார்கள். கொழந்தங்க நிகழ்ச்சி நடக்குது இந்தாளு எதுக்கு தான் இப்படி காத்துகிறாறோ என்பது போல் பார்த்துவிட்டு, விட்ட இடத்திலிருந்து பேசிக் கொண்டுதான் இருந்தார்கள்.

சென்ற நவம்பரில் நடந்ததை இப்போது நான் எழுதுவதற்க்கு காரணம், சமீபத்தில் நான் படித்த ஒரு பதிவு.

Surveysan - அழிப்பவன் அல்ல அளப்பவன்!: CTA 2010 ஆண்டு விழாவும் இங்கிதம் தெரியா டமில் தேசிகளும் என்ற இந்தப் பதிவைப் படித்த போது தான் தமிழ் ஆடியன்ஸ் எந்த நாட்டில் இருந்தாலும் இப்படி தான் என்று தெரிந்தது. .

Surveysan-ல் பதிவிலிருந்து சில பகுதிகள் blue கலரில்

 அரங்கத்தை விட்டு எழுந்து போய் பேசிட்டு வரணுங்கர இங்கிதம், எம்புட்டு படிச்சும், இம்புட்டு தூரம் வந்தும், நம்ம மக்களுக்கு இல்லாம போனது ரொம்பவே பெரிய சோகம்.ஆனா, ரொம்ப படித்தவர்களின், இயல்பே இதுதானான்னு கேட்டீங்கன்னா, அதுதான் இல்லை. இதே மக்கள், ஒரு அமெரிக்க நிகழ்ச்சிக்கோ, ஆங்கில சினிமா தியேட்டருக்கு, வேற ஏதாவது ஒரு கண்றாவிக்கோ போனா, தொரை மாதிரி வாய்ல வெரல வச்சுக்கிட்டு ஒக்காருவாங்க. இது என்ன உளவியல் காரணமோ தெரியல. தேசிகள் ஒன்று பட்டால், எருமைக் கூட்டம் மாதிரி ஆயிடறோம். தனி மனித சுய டிஜிப்ளின் கொஞ்சம் கூட இல்லாத கூட்டம் நம்ம கூட்டம்!ஹ்ம்!//

தமிழர்கள் மட்டும் தான் இப்படி இருக்கிறார்களா இல்லை மற்ற இந்தியர்களும் இப்படி தானா என்று தெரியவில்லை.தமிழர்கள் எங்கு கூடினாலும் பேசிக் கொண்டே தான் இருப்பார்கள். மேடையில் என்ன நிகழ்ச்சி நடந்தாலும் கவலைப் படாது அவர்கள் பாட்டுக்கு பேசிக் கொண்டே இருப்பார்கள். நான் கூட நம்ம குரூப் தான் இப்படி பேசிக் கொண்டே இருக்கிறது என்று ஏக வருத்ததில் இருந்தேன், ஆனால் சர்வேசனின் மேற்கண்ட பதிவைப் படித்ததும் தமிழர்கள் உலகில் எந்த மூலையில் இருந்தாலும் இப்படி தான் இருப்பார்கள் என்று அறிந்த போது சற்று நிம்மதியடைந்தேன். (நான் பெயில் என்ற சோகம் என் நண்பனும் பெயில் தான் என்று அறிந்த போது மகிழ்ச்சியாய் மாறியது என்பார்களே அது போல)

 மற்ற தேசத்தவர்களும் கூட்டம் நடத்துகிறார்கள். அவர்களிடம் ஒரு ஒழுங்கு இருக்கிறது. நெட்வொர்கிங்-காக ஒதுக்கப்பட்ட நேரம் தவிர மற்ற நேரத்தில் அமைதிக்காக்கிறார்கள். மேடையில் நடக்கும் நிகழ்ச்சிக்கு அத்தனை மரியாதை கொடுப்பார்கள். சைலன்ஸ் ப்ளீஸ் என்றெல்லாம் அங்கே யாரும் கத்திக் கொண்டிருக்கவில்லை ஏன்று திருந்துமோ நம் தமிழ் கூறும் நல்லுலகம்.

அந்த பதிவின் கமென்ட்ஸ்-பகுதியில் (பின்னூட்டம் தான் -என் நண்பர்கள் பலர் தமிழ் வலைக்கு புதுசு)  தமிழ் பிரியன்  என்ற நண்பர் ஒரு யோசனை தெரிவித்திருந்தார். சபையில் ஆங்காங்கே வால்ண்டியர்ஸை நிறுத்தி  வைத்து எந்தப் பகுதியில் சத்தம் வருதோ, அந்த வாலண்டியரைப் பார்த்து சத்தம் போடலாம் என்று சொல்லியிருந்தார்.

எனக்கு தோண்றிய சில வழிமுறைகள்.

ஆனால் இதற்கும் ஆடியன்ஸ் ஒத்துழைப்பு இருந்தால் தான் முடியும். ஸ்போர்டீவ்வாக எடுத்துக் கொள்ளக் கூடிய ஆடியன்ஸ்களிடம் மட்டுமே இவற்றை செயல்படுத்த முடியும்


  •  பேசிக் கொண்டிருப்பவர்கள் பெயர்களைச் சொல்லி அவர்களுக்கு ஒரு ”ஓ” போட சொல்லலாம்.

  • ரொம்ப அரட்டையில் இருக்கிற குரூப்-ஐ செலக்ட் செய்து மேடைக்கு வரவைத்து ரூ.10 பரிசு தரலாம்.

  • அப்பவும் அடங்கவில்லை என்றால் அடுத்த ”பேசுகிற” குரூப்பை செலக்ட் செய்து மேடைக்கு அழைத்து,  பாடவோ ஆடவோ சொல்லலாம்.
 இவை எல்லாவற்றுக்கும் மேலே ரொம்ப டெரரான ஒரு ஐடியா இருக்கு
உளியின் ஓசை, சுறா, பெண்சிங்கம்னு என்று எதாவது ஒரு  படத்தை திரையிட்டு அமைதி ஏற்படுத்தாலாம். (ஆனால்,எல்லோரும் அரங்கை விட்டு வெளியேறி விடும் ஒரு ரிஸ்க் இதில் இருக்கு.)
4 comments:

rk guru said...

உங்க பதிவு குழந்தையின் புன்னகை...வாழ்த்துக்கள்

Thomas Ruban said...

ராணி, ராஜா மாதிரி சிரிச்சி அசத்துகிறார் வாழ்த்துக்கள்.

என்னுடைய யோசனை:-

என் வீட்டுக்கு அருகிலுள்ள இனிப்பு கடையில் இருந்து அல்வா பார்சல் அனுப்புகிறேன் அதை பார்வையாளர்களுக்கு கொடுக்கவும்.
அப்புறம் அவர்கள் வாயை திறக்கமுடியுமா!!!
(உங்களுக்காக வேண்டுமானால் கடைக்காரரிடம் ஸ்பெஷல் அல்வா எப்படி செய்வது என கேட்டுப் பார்க்கிறேன்)

ரிஷபன்Meena said...

//என் வீட்டுக்கு அருகிலுள்ள இனிப்பு கடையில் இருந்து அல்வா பார்சல் அனுப்புகிறேன் //

பெண்சிங்கத்தை விட ரொம்ப டெரரா இருக்கும் போல இருக்கே உங்க அல்வா.

mohan KING OF KITCHEN ART'S CARVING said...

dear friend ur blogger v nice \
im mohan right now swiss hospitality industry as kitchen arts in kuwait

hospitality industry is not only a profession, but real passion – living a dynamic, interesting and challenging life, improving oneself every day, meeting different people from all over the world, trying always to be immaculate in one’s appearance and attitude, aiming at gaining more and more knowledge and diversify one’s abilities – this is my understanding of an appealing and challenging profession