Saturday 22 May 2010

கெட்டப் சேஞ்

//நான் ‘ரிஷபன்’ என்கிற பெயரில் பல ஆண்டுகளாக எழுதி வருகிறேன்.. பிரபல வார, மாத இதழ்களில் (கல்கி,விகடன், குமுதம், கலைமகள், அமுதசுரபி, தேவி, மங்கையர் மலர் உள்பட) என் படைப்புகள் பல பரிசுகளும், பிரசுரங்களும் (1000 க்கு மேல்)வந்து விட்டன. 16 சிறுகதைத் தொகுப்புகளும் வெளியாகி விட்டன. என்னுடைய வலைத்தளமும் 100 பதிவுகளைத் தாண்டி விட்டது.. நீங்களும் அதே பெயரை பயன்படுத்துவது குழப்பம் வராதா.. தயவு செய்து யோசிக்கவும். நன்றி.//


ரிஷபன் என்ற பெயரிலே வலைப்பூ நடத்தும் இன்னொரு நண்பர் முந்தைய பதிவில்  இந்த பின்னூட்டம் இட்டு இருந்தார்.

அவருக்கு ரிஷபன் என்ற பெயர் வலைத்தளத்தில் முன்பே எடுக்கப்-பட்டிருக்கிறது என்று தெரிந்தும் தொடர்ந்து ரிஷபன் (லேபில் மட்டும் ரிஷபன், அக்கவுண்ட் வேறோரு பெயரில் எடுத்திருந்தார்) என்ற பெயரிலேயே எழுதி வந்திருக்கிறார்.

அவருக்கு முன்பே நான் ப்ளாக்கரில் பதிவு செய்திருந்த போதும், பல தளங்களில் அவர் இந்தப் பெயரில் இயங்குவதால் நான் கெட்டப் சேஞ் செய்து கொள்ள முடிவு செய்திருக்கிறேன். இப்படி ஒரு பெயரில் ஒருவர் எழுதி வருவது தெரிந்திருந்தால் நான் வேறு பெயரிலேயே பதிவு செய்திருப்பேன்.


கெட்டப் சேஞ் செய்வதால் எனக்கு பெரிதாக எந்த இழப்பும் வரப் போவதில்லை என்பதாலும்   இன்றிலிருந்து


              ரிஷபன் Meena


                                                 என்ற பெயரில் இயங்க இருக்கிறேன்.

                                                                            நன்றி!!

6 comments:

சீமாச்சு.. said...

நல்ல முடிவு.. ச்சும்மா அடிச்சி ஆடுங்க..

ரிஷபன்Meena said...

நன்றி சீமாச்சு.

லேபிலில் பெயரை மாற்றியும் இன்னும் ரிஷபன் என்றே பின்னூட்டங்களில் வருகிறது.

மோனி said...

நீங்கள் உங்கள் Mail ID-யில் என்ன பெயரில் பதிவு செய்திருக்கிறீகளோ அந்த பெயரிலேயே பின்னூட்டமும் வரும். (i think you are in G-Mail)

Goolge Account Setting-சில் உங்கள் profile-ல் உங்களது nickname மாற்றுங்க்கள்..

நன்றி - திரு ரிஷபன் அவர்களின் கருத்துக்கு...

மோனி said...

அல்லது உங்கள் Blog-ல் Display name-ஐ மாற்றி விடுங்கள்..

ரிஷபன்Meena said...

நன்றி மோனி!

மாற்றியாச்சு.

ரிஷபன் said...

நன்றி நண்பரே!
வருக.. நாம் பல புதிய சிகரங்களைத் தொடுவோம்..அன்பால்.. நல்ல நட்பால்.