Thursday 23 December 2010

வாஃபி(Wafi) மால்-கிறிஸ்துமஸ் ம்யூசிக் அண்ட் லைட் ஷோ




ஷாப்பிங் மால் அத்தனயும் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டுக் கொண்டாட்டத்துக்கு கலை கட்டியிருப்பது  வாடிக்கை தான்.  பெரிய கிறிஸ்துமஸ் மரம் வைத்து  பார்க்குமிடமெல்லாம் நமக்குள்ளே ஒரு பெஸ்டிவல் உணர்ச்சியை தினிக்கும் வன்னம் அலங்காரம் செய்தும் இருப்பார்கள்.

நேற்று வாஃபி மால் சென்றிருந்தேன். வாஃபி மால் எகிப்து பிரமிட் போலவே தோற்றம் உடையது, பிரமிட் போன்றே கட்டப்பட்ட மாலின் வாசலில் Egyptian Pharaohs சிலைகளும் இருக்கும். கார் பார்க்கிங் ஏரியாவிலிருந்து வெளி வருகையில் லைட் ஷோ அறிவிப்பு பார்த்து அங்கேயே வெயிட் பண்ணினேன்.
மணிக்கு ஒரு தரம் அந்த ஷோ பத்து நிமிடங்களுக்கு நடக்கிறது. 

வெளிப்புற சுவற்றில் லேசர் லைட் வைத்து அதகளம் பண்ணினார்கள். சில சமயம் தியேட்டரில் பார்க்கும் படம் போலவே இருந்தது. விளக்குகளை வைத்து இருக்கும் பொருளை மறைய வைக்க முடியுமா ? முடியும் Egyptian Pharaohs சில சமயங்களில் மறைந்தே போனது, சில சமயம் அவைகளும் ஆட்டத்தில் கேரக்டர்களாக ஆனது.  இந்த ஷோ நடந்த போது மால் வழக்கம் போல இயங்கிக் கொண்டிருந்தது. மக்கள் உள்ளே செல்வதும் வருவதுமாக இருந்தார்கள் ஆனால் அதனால் தெரிகிற காட்சிக்கு ஒரு இடையூரு கூட இல்லாதிருந்தது.


லேசர் விளக்குகளால் நடந்த அந்த ஷோவின் யூ ட்யூப் வீடியோ தொடுப்பு தான் மேலே கொடுத்திருப்பது. நல்ல புரபஷனல் நபர் எடுத்திருக்கிறார். அதனால் பில்டிங் மேல் விளக்கு அடிக்கப் படுவது தெளிவாக தெரிகிறது.

நான் சோனி சைபர் ஷாட்டில் எடுத்ததை கீழே இனைத்துள்ளேன். நான் நேர்த்தியாக எடுக்காததால் எதோ சினிமா தியேட்டரில் ஒடுகிற  படம் மாதிரி வந்திருக்கிறது.புரபசனலாக எடுத்ததை விட என்னுடைய கவெரேஜ் நன்றாக வந்துள்ளது.( என்று நான் நினைக்கிறேன், பீ கேர் புல்)  சில சமயம் அதிக விஷயம் தெரியாமல் இருப்பதும் நல்லதுக்கு தான் போலருக்கு. சில வினாடிகள் கொஞ்சம் டார்க் ஆக தெரியும்,அதன் பிறகு வரும் காட்சிகள்  ஓ.கே( உங்களுக்கே பழகிவிடும்)






6 comments:

Thomas Ruban said...

லேசர் ஷோ,இனிய இசையில் அருமையாக உள்ளது.

கறுப்புத்தான் எனக்கு பிடிச்ச கலருன்னு சொல்லாமல் காட்டிடீங்க....

உங்களுக்கும், உங்கள் நண்பர்கள் அனைவருக்கும் இனிய கிறிஸ்மஸ் மற்றும் புத்தாண்டு வாழ்த்துக்கள் சார்.

ரிஷபன்Meena said...

தாமஸ் ரூபன்,

நன்றி!!

இனிய கிறிஸ்மஸ் அண்ட் புத்தாண்டு வாழ்த்துக்கள்.

Meena said...

புதுமையாக உள்ளது. வாழ்த்துக்கள்

தருமி said...

வாபி மால் எங்க இருக்குன்னு சொல்லலை!

ரிஷபன்Meena said...

தருமி சார்,

ஆமா அத சொல்லவே இல்லயில்ல, துபாய்-ல் இருக்கு சார். இந்தியர்கள் விண்டோ ஷாப்பிங் மற்றும் போட்டோ எடுப்பதற்கு மட்டும் போகுமிடம்.

Nara said...
This comment has been removed by the author.