Thursday, 27 May 2010

டம்பப் பை


பெரிய ஷாப்பிங்மால்களில் இருக்கும் கடைகளில் பிரமாண்டமான ஆடம்பரமான கடைகள் அணிவகுத்து இருக்கும்.  எதற்கு தான் இத்தனை செருப்பு, துணிக்கடைகள் என்று நினைக்க வைக்கும். நம்ம ஊர் ஜவுளிக்கடை அல்ல கடல் என்று விளம்பரப்படுத்தப் படும் கடைகள் போல் அல்லாமல் எத்தனை துணி இருக்கு என்று எண்ணி விடக் கூடிய வகையில் ரொம்ப கம்மியாக ஆனால் அழகாக டிஸ்ப்ளே ஆகி இருக்கும்.

விலையைக் கேட்டால் தலை சுற்றி விழ வைக்கும்.  லெதர் பேக் விற்கும் கடைகளில் எண்ணி பத்தே பத்து தான் அங்கொன்றும் இங்கொன்றுமாக டிஸ்ப்ளே ஆகி இருக்கும். இவைகளை யார் இத்தனை விலை கொடுத்து வங்குவது என்று நினைப்பேன்.


நேற்று எனக்கு வந்த ஈமெயில் இருந்த படங்களைப் பார்த்ததும் அத்தனை விலை கொடுப்பவர்களை பிடித்து உதைத்தால் என்ன என்றிருந்தது.

பிலிப்பைன்ஸ்-ல் இது உணவாகக் கூட இருக்காலாம் ஆனால் இப்படி கண்டபடி வேட்டையாடினால் எக்கலாஜிக்கல் பாலன்ஸ் தவறதானே செய்யும்.

எளிமையாய் இரு என்று நம் சித்தாந்தங்கள் சொல்வதன் அர்த்தம் இப்போதான் எனக்குப் புரிகிறது. ஆடம்பரங்களுக்குப் பின்னால் இத்தனை உயிர் சேதம் இருக்கிறது தானே.

புலித்தோலுக்கும் பாம்புத் தோலுக்கும் பணத்தை அழுகும் கயவர்கள் உள்ள வரை அதை வேட்டையாடுபவர்கள் இருக்கத் தான் செய்வார்கள்.





Saturday, 22 May 2010

கெட்டப் சேஞ்

//நான் ‘ரிஷபன்’ என்கிற பெயரில் பல ஆண்டுகளாக எழுதி வருகிறேன்.. பிரபல வார, மாத இதழ்களில் (கல்கி,விகடன், குமுதம், கலைமகள், அமுதசுரபி, தேவி, மங்கையர் மலர் உள்பட) என் படைப்புகள் பல பரிசுகளும், பிரசுரங்களும் (1000 க்கு மேல்)வந்து விட்டன. 16 சிறுகதைத் தொகுப்புகளும் வெளியாகி விட்டன. என்னுடைய வலைத்தளமும் 100 பதிவுகளைத் தாண்டி விட்டது.. நீங்களும் அதே பெயரை பயன்படுத்துவது குழப்பம் வராதா.. தயவு செய்து யோசிக்கவும். நன்றி.//


ரிஷபன் என்ற பெயரிலே வலைப்பூ நடத்தும் இன்னொரு நண்பர் முந்தைய பதிவில்  இந்த பின்னூட்டம் இட்டு இருந்தார்.

அவருக்கு ரிஷபன் என்ற பெயர் வலைத்தளத்தில் முன்பே எடுக்கப்-பட்டிருக்கிறது என்று தெரிந்தும் தொடர்ந்து ரிஷபன் (லேபில் மட்டும் ரிஷபன், அக்கவுண்ட் வேறோரு பெயரில் எடுத்திருந்தார்) என்ற பெயரிலேயே எழுதி வந்திருக்கிறார்.

அவருக்கு முன்பே நான் ப்ளாக்கரில் பதிவு செய்திருந்த போதும், பல தளங்களில் அவர் இந்தப் பெயரில் இயங்குவதால் நான் கெட்டப் சேஞ் செய்து கொள்ள முடிவு செய்திருக்கிறேன். இப்படி ஒரு பெயரில் ஒருவர் எழுதி வருவது தெரிந்திருந்தால் நான் வேறு பெயரிலேயே பதிவு செய்திருப்பேன்.


கெட்டப் சேஞ் செய்வதால் எனக்கு பெரிதாக எந்த இழப்பும் வரப் போவதில்லை என்பதாலும்   இன்றிலிருந்து


              ரிஷபன் Meena


                                                 என்ற பெயரில் இயங்க இருக்கிறேன்.

                                                                            நன்றி!!

Saturday, 15 May 2010

உஷ்!! பாப்பா தூங்குது

 
Posted by Picasa

குழந்தைகள் விளையாட்டை ரசிப்பதே தனி சுகம் தான்.

அவர்களுடைய கற்பனைக்கு எல்லையே இல்லை.

என் மூன்று வயது மகள் மீனா விளையாடிக் கொண்டிருந்த போது ”க்ளிக்”கியது

தலையணையாக டேபிள் டென்னிஸ் பேட், படுக்கையை ஈரம் செய்துவிட்டால் மாற்றிக் கொள்ள அருகிலேயே டிரஸ், பாப்பா தூங்கும் போது ஈ வந்தால் விரட்ட ”ஈ“பேட்.









********************************************************************