Monday 14 June 2010

முயல் ஆமை வால்ட் டிஸ்னி வெர்சன்

மராட்டிய மன்னன் சிவாஜி அம்மா சொன்ன வீரக் கதைகளைக் கேட்டு வளர்ந்தால் தான் பின்னாளில் வீரசிவாஜியாக முடிந்தது. சின்ன வயதில் நிறைய வீரக் கதைகள் கேட்காததால் தானோ என்னவோ நான் ரொம்ப சாதுவாகவே வளர்ந்துவிட்டேன். குமுதம் ஆசிரியர் எஸ்.ஏ.பி சிறுவயதில் தன் தந்தையை இழந்த போதிலும்,அம்மா சொல்லிய கதை கேட்டு வளர்ந்ததால் வாசிப்பில் தனக்கு ஈடுபாடு வந்ததாக ஒரு முறை சொல்லியிருந்தார்.

ஆக கதைகள் குழந்தைகள் உள்ளத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன என்பது உனமை. அதனால் என் மகளுக்கு ஒன்றரை வயதிலேயே நான் கதை சொல்ல ஆரம்பித்து விட்டேன்.அவள் கவனிக்கிறாளோ இல்லையோ  கடனே என்று அவள் தூங்கும் வரை கதை சொல்வது வழக்கம்.


இப்போது மூண்று வயதாகிறது. இரண்டு வயதிலிருந்து கொஞ்சம் கவனிக்க ஆரம்பித்து இப்போது பாட்டி வடை சுட்ட கதையை பல variation-களில் திருப்பி சொல்ல ஆரம்பித்திருக்கிறாள். சில சமயம் காக்காய்க்கு பாட்டியே வடையைக் கொடுப்பதாக வரும் சில நேரங்களில் வடைக்கு பதில் சாக்லேட் வரும், நரிக்கு பதில் குரங்கு இப்படி எதேனும் மாறுதல்களுடன் சொல்லுவாள்.

சமீபத்தில் முயலும் ஆமையும் கதை சொன்னேன். என்னதான் ஆமை, முயல் படங்களை பார்த்திருந்தாலும் முயல் வேகமா போகும் ஆமை ஸ்லோவா போகும் என்றால் அவளுக்கு விளங்கவில்லை. சரி யூடுயூப்-ல் பார்க்கலாம் என்று தேடிய போது Walt Disney Studios-ன் இந்த அற்புதமான படம் கிடைத்தது.

சில  இந்திய அனிமேஷன் படங்கள் ரொம்ப தூரபையாய் இருக்கின்றன. நாம் அனிமேஷனுக்கு அவ்வளவு செலவு செய்வதில்லையா என்று தெரியவில்லை.

மனிரத்தினம், ஷங்கர் மற்றும் பாரதிராஜா போன்ற டைரக்டர்கள் படங்கள் மட்டுமல்லாது பாடல்காட்சிகள் கூட அவர்களுடைய தனிபானியில் இருக்கும்,அது போல கார்டூன் படங்களில் வால்ட் டிஸ்னி-யின் பானியே தனிதான். அவர்களின் கிரியேட்டிவிட்டியைப் பாராட்டாமல் இருக்க முடியாது ஒரு சாதாரன முயல் ஆமைக் கதையை இவர்களைப் போல் விறுவிறுப்பாய் நகைச்சுவையாய் வேறு யாராலும் எடுக்க முடியுமா தெரியாது.

.

1 comment:

ஜோதிஜி said...

என்னங்க போட்டி தலைப்பை இத்தனை எளிமையாய் முடித்து விட்டீங்க.