Tuesday 29 June 2010

சென்செக்ஸ் எப்படி கணக்கிடப்படுகிறது

ஒரே நாளில் சென்செக்ஸ் 600 பாயிண்ட்கள் சரிந்தது என்றெல்லாம் நியூஸ்-ல் கேட்டு இருப்பீர்கள். பங்கு வர்த்தகத்தில் ஈடுபாடு இருக்கிறதோ இல்லையோ சென்செக்ஸ் என்கிற வார்த்தையை ஒரு நாளில் ஒரு முறையேனும் நீங்கள் கேட்காமல் இருக்க முடியாது. இந்தக் குறியீடு பங்கு சந்தையின் நிலையை அறியும் தெர்மா மீட்டர் என்று எல்லோருக்கும் தெரியும் ஆனால் அதை எப்படி கணக்கிடுகிறார்கள் என்று தெரிய வாய்பில்லை. அதை விளக்கவே இந்தப் பதிவு.



1986 வருடம் தான் முதல் முதல் 1978-79 -ஐ base year (100 பாயிண்ட்ஸ்) ஆக வைத்து இந்த index கணக்கிடப்பட்டது. அதற்கு முன்பு வரை இந்திய பங்கு சந்தை ஏற்ற இறக்கத்தைக் குறிக்க எந்தக் குறியீடும் இல்லாமல் தான் இருந்தது.

இந்த சென்செக்ஸ் , BSE-ல் லிஸ்ட் செய்யப்பட்ட தரமான 30 பல்வேறு துறைகளின் விலை ஏற்ற இறக்கத்தை வைத்து, Free Float Market Capitalisation முறையில் கணக்கிடப்படுகிறது. ( குறிப்பு: இந்த கணக்கிடும் முறை மாற்றத்திற்கு உட்பட்டது, இப்போதைய முறை 2003-ல் வருடத்தில் இருந்து நடைமுறையில் உள்ளது 1986 -2003 வரை Full Market Capitalisation வழக்கத்தில் இருந்தது )


ஆமா அது என்ன Free Float Market Capitalisation ? முதலில் Market Capitalisation என்றால் என்ன என்று பார்போம்.

அந்தக் கம்பெனி வெளியுட்டுள்ள ஷேர்களின் தற்போதைய மார்கெட் மதிப்பே மர்கெட் காப்பிடலைஸேஷேன் என்றழைக்கப்படுகிறது.

உதாரணத்துக்கு KSB Pumps- வெளியிட்டுள்ள மொத்த ஷேர்கள் 1.7403 cores (Issued Capital) ஒரு ஷேரின் மார்கெட் மதிப்பு Rs.490

KSB Pumps-ன் மார்கெட் காபிடலைஸேஷன் = 1.7403 x Rs.490 = 852.79 Crores

( No.of Outstanding Shares multiplied by the market value of the Share)

இந்த "Mrkt.Cap"-மதிப்பை வைத்தே அவை லார்ஜ் கேப், மிட்-கேப் மற்றும் ஸ்மால் கேப் என்றெல்லாம் வகைப் படுத்தப்படுகின்றன.

ஆனால் ஒரு கம்பெனி வெளியிட்டுள்ள அத்தனை ஷேர்களும் ஒப்பன் மார்கெட்டில் டிரேட் ஆகிக் கொண்டிருக்காது. ப்ரோமோட்டர்கள் நிர்வாகிகள் வசம் இருக்கும் "controlling interest" ஷேர்கள் சில, FDI- கள் (Foreign Direct Investors)வசம் சில , அரசாங்கத்தின் கையில் (Promoter/acquirer)என்று இருப்பவை தவிர்த்து மார்கெட்டில் எல்லோராலும் தடையின்றி வாங்கி விற்கப்படும் ஷேர்களே அந்தக் கம்பெனியின் ஃப்ரீ ப்லோட். இதன் மார்கெட் மதிப்பே ஃப்ரீப்லோட் மார்கெட் காப்பிடல் ஆகும்.( இதை சதவிகிதமா சொல்லும் போது அது free float factor எனப்படும்).
இப்ப நமக்கு பேஸிக் டெர்மினாலாஜி எல்லாம் தெரிஞ்சாச்சு , இனி எப்படி சென்செக்ஸ்- கணக்கிடுவதென்று பார்க்கலாம்

1. இந்த கணக்கீட்டுக்காக தெரிவு செய்யப்பட்டிருக்கும் 30 ஷேர்களின் Free Float Market Cap-ஐ கண்டுபிடிக்கனும்.

2.Free Float Market Cap-அத்தனையையும் கூட்ட வேண்டும்

3 அந்தக் கூட்டுத் தொகையை base year (1978-79 base value=100 சென்செக்ஸ் பாயிண்ட்ஸ்)-க்கு ஒப்பிடக்கூடிய வகையில் சமன் படுத்துவதே சென்செக்ஸ் மதிப்பீடு ஆகும் இந்த மூன்றாவது கொஞ்சம் புரியாதது போல இருக்கும். இது எப்படி என்பதை கடைசியில் பார்போம். இனி சென்செக்ஸ்


30 கம்பெனிகளின் நேற்றைய Free Float Market Cap = 320000கோடிகள் நேற்றைய சென்செக்ஸ் = 16000 பாயிண்ட்கள்

30 கம்பெனிகளின் இன்றைய Free Float Market Cap = 336000 கோடிகள் என்றால் இன்றைய சென்செக்ஸ் குறியீடு எவ்வளவு

நேற்று நிலவரப்படி 20 கோடிக்கு ஒரு பாயிண்ட் என்றால் இன்றைக்கு எத்தனை பாயிண்ட்

320000/16000 =20 ( இதற்கு index divisor என்று பெயர்)

336000/20 =16800 பாயிண்ட்கள்

Base year ( 1978-79 base value=100 சென்செக்ஸ் பாயிண்ட்ஸ்)-க்கு ஒப்பிடக்கூடிய வகையில் சமன் படுத்துவது ஏன்றால் என்ன ?ஒரு சின்ன உதாரனத்தை வச்சுக்கிட்டு பார்த்தா கொஞ்சம் புரியும்
1978-79 ஆம் வருடம் மார்ச் 31ம் தேதி மாலை டிரேடிங் முடிந்ததும், 30கம்பெனிகளின் Free Float Market Cap ரூ 60,000 என்று வைத்துக் கொண்டு அன்றைய தினத்தின் சென்செக்ஸ் 100 என்று குறித்திருந்தோமேயானால் அந்தக் கம்பெனிகளின் 1986-ம் வருட Free Float Market Cap =840,000 என்றால் 1986-ல் இந்தக் கம்பெனிகளின் சென்செக்ஸ் கீழ்கண்டவாறு கணக்கிட்டு இருப்பார்கள்

60000/100 =600 (index divisor )

1986-ம் வருட Free Float Market Cap =840,000 /600 =1400 பாயிண்ட்ஸ்

ஒவ்வொரு நாளுக்கும் Free Float Market Cap கணக்கிடப்பட்டு index divisor (Index divisor = Previous F.F.M.Cap/ Previous Sensex point) ஆல் வகுக்க புதிய சென்செக்ஸ் கிடைக்கிறது. இந்த 1400 தான் இப்படி 16800 பாயிண்ட்களாக வளர்ந்து நிற்கிறது.


அதெல்லாம் சரி எப்படி அந்த 30 ஷேர்களை தேர்வு செய்கிறார்கள்?
என்ன என்ன கம்பெனி ஷேர்கள் அதில் இடம் பிடித்திருக்கிறது என்பது பற்றி அடுத்த பதிவில் எழுதுகிறேன்.

மேலதிக விபரங்கள் தெரிய http://www.bseindia.com/ வலைத்தளத்தில் அறியலாம்.













6 comments:

Thomas Ruban said...

சென்செக்ஸ் பற்றிய அடிப்படை விசியங்களை எளிமையாக தெளிவுபடுத்தியுள்ளிர்கள்,தொடருங்கள்..

பகிர்வுக்கு நன்றி சார்.

Ram said...

ரிஷபன்,

சுலபமாய் புரியும் நடை. தெளிவான ஓட்டம். தொடர்ந்து எழுதுங்கள்.

லலிதா ராம்

Ananthi (அன்புடன் ஆனந்தி) said...

தேவையான தெரிந்து கொள்ள வேண்டிய விஷயம்...
பகிர்வுக்கு நன்றி :)

ரிஷபன்Meena said...

நன்றி தாமஸ் ரூபன்

நன்றி லலிதா ராம்

நன்றி ஆனந்தி

ரிஷபன்Meena said...

இந்த இடுக்கையை பாப்புலர் ஆக்கிய நண்பர்கள் அனைவருக்கும் நன்றி!!


Hi rishaban,

Congrats!

Your story titled 'சென்செக்ஸ் எப்படிக் கணக்கிடப்படுகிறது' made popular by tamilish users at tamilish.com and the story promoted to the home page on 1st July 2010 01:44:02 AM GMT



Here is the link to the story: http://www.tamilish.com/story/289166

Thank you for using Tamilish.com

Regards,
-Tamilish Team

Anonymous said...

தயவு செய்து, இன்னும் புரியவில்லை . நான் இதற்கு புதிது . அதனால் . எனக்கு இன்னும் விளக்கம் வேண்டும்.. அதாவது செய்தியில் சொல்லும்போது எப்படி புறிந்து கொள்வது. மற்றும் எப்டி கணக்கிடுவது. என்னுடைய மின்னஞ்சல் - nagarajanjayam@yahoo.co.in